தேர்தல் பத்திர விவகாரத்தை திசைத்திருப்ப சிஏஏ சட்டம் : தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!
எஸ்பிஐ தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்பும் விதமாக CAA சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களை ஏன் CAA-வில் சேர்க்கவில்லை ; இந்தி பேசும் இந்துக்களுக்கு ஒரு நீதி, தமிழ் பேசும் இந்துக்களுக்கு நீதியா என செல்வப்பெருந்தகை கேள்வி.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட காங்கிரஸ் ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற பயிற்சி முகாமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப்பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த் செல்வப்பெருந்தகை, நான்கு ஆண்டுகளாக CAA சட்டத்தை தள்ளி வைத்து விட்டு தேர்தல் நேரத்தில் கொண்டு வருவதற்கான காரணம் என்ன என கேள்வியெழுப்பினார். இலங்கை தமிழர்களை ஏன் CAA-வில் சேர்க்கவில்லை என்றும் இந்தி பேசும் இந்துக்களுக்கு ஒரு நீதி, தமிழ் பேசும் இந்துக்களுக்கு நீதியா என கேள்வியெழுப்பினார். வீரபாண்டியனை காட்டிக்கொடுத்த எட்டப்பனை போல் அண்ணாமலை தமிழர்களை காட்டிக்கொடுக்கிறார்.
CAA சட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்த்தது. அதிமுக மட்டுமே ஆதரித்தது என்றும் அதிமுகவும் இதற்கு பதிலளிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பு சட்டம் 14வது பிரிவை ஏன் புறக்கணிக்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்கு ஏன் ஓரவஞ்சனை காட்டுகிறார்கள். மோடி, அமித்ஷா பேச்சை கேட்டுக்கொண்டு அண்ணாமலை எட்டப்பனாக மாறி வருகிறார் என்றும் அண்ணாமலை ஏன் தமிழர்களின் உரிமையை சிதைக்கிறார்.
இலங்கை தமிழர்கள் யார் அண்ணாமலை இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். தமிழர்களின் நலனை மோடியும், அண்ணாமலையும் புறக்கணிக்கின்றனர். எஸ்பிஐ தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்பும் விதமாக CAA சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.
மகளிர் உரிமத்தொகையை பிச்சை என விமர்சித்த நடிகை குஷ்பூ மகளிர் மீது அக்கறை இல்லாத மகளிர் என விமர்சித்தர். தமிழ்நாட்டி பிரச்சாரத்திற்கு வரும் மோடி தமிழ்நாடு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். தமிழர்களின் நலனை மோடியும், அண்ணாமலையும் புறக்கணிக்கின்றனர். எஸ்பிஐ தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்பும் விதமாக CAA சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர் என கூறினார்.
பாஜக வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடாமல் விலகி வருகின்றனர் என்றும் எதை தின்றால் பித்தம் தெளியும் என தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி பெரு வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டபோது பிரதமர் வருகை தந்தாரா என கேள்வியெழுப்பினார். போதை பொருளின் துவக்க புள்ளியே பாஜகதான். ஒன்றிய அரசின் அனைத்து துறைகளையும் மீறி போதைப்பொருள் எப்படி இந்தியா வருகிறது.
2021ம் ஆண்டும் தமிழ்நாடு அரசு CAA சட்டம் நடைமுறைபடுத்தப்படாது என தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ஓரிரு நாட்களில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அடையாளம் காணப்படும் என்றும் விரைவில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்பமனு வழங்கப்படும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.