டெபாசிட் தொகையை லஞ்சம்னு சொல்றீங்க… திரித்து சொல்லாதீங்க : திமுக அமைச்சர் வேதனை!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2024, 10:38 am
Ma Subramani - Updatenews360
Quick Share

சைதாப்பேட்டையில் வடமாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த சிறுவனின் சகோதரிக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை அளிக்க ரூ.1000 லஞ்சம் கொடுத்ததாக அந்த சிறுமியின் தந்தை தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்ட போது, எழும்பூர் ஆஸ்பத்திரியில் லஞ்சம் கேட்டார்கள் என்பது முற்றிலும் தவறானது.

வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் நமது அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற ரூ.1000 டெபாசிட் வாங்கப்படும். அதன் பிறகு பரிசோதனைகள் தேவைப் பட்டால் அதற்கும் ஒவ்வொரு பரிசோதனைக்கும் தனித்தனி கட்டணங்கள் உள்ளது.

இது எல்லா மாநிலங்களிலும் நடைமுறையில் இருப் பதுதான். இந்த உண்மையை உணராமல் திரித்து சொல்வது வேதனை அளிக்கிறது. இந்த மாதிரி தவறான குற்றச்சாட்டுகளால் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும்.

அரசு ஆஸ்பத்திரிகள் நமது ஆஸ்பத்திரி. அவை சிறப்பாக நடக்க எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். சைதாப்பேட்டை சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலக்க வில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தொழிலாளர் முகாமில் 625 குடும்பங்கள் வசிக்கிறது. மொத்தம் 1300 பேர் இருக்கிறார்கள். வேறு யாருக்கும் உடல்நல பாதிப்பு இல்லை என்பதை வீடு வீடாக சென்று சோதனை நடத்தி கண்டறியப்பட்டு உள்ளது. சிறுமி உயிரிழந்த தற்கு காரணம் என்ன என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தெரிய வரும் என கூறினார்.

Views: - 85

0

0