இனியும் ஈயம் பூசாமல் பட்டியலின பஞ்சாயத்து தலைவர்களை அழைத்துப் பேசுங்கள் : ஆதாரத்துடன் திமுக அரசை சாடிய இயக்குநர்!

Author: Udayachandran RadhaKrishnan
2 அக்டோபர் 2024, 5:22 மணி
Panchayat
Quick Share

நந்தன் படத்தை மறுபடி மறுபடி குறிப்பிடுவதை குறையாக கருதாமல் பட்டியலின பஞ்சாயத்து தலைவருக்கு குரல் கொடுக்க வேண்டும் என சினிமா இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செஞ்சி அருகே உள்ள ஆனாங்கூர் பஞ்சாயத்து தலைவர் சங்கீதா சாதிய வன்கொடுமைக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் ஒற்றை மனுஷியாய் போராடுகிறார்.

பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரை நாற்காலியில் அமர விடாமலும், கோப்புகளில் கையெழுத்துப் போட விடாமலும், சாதியரீதியாகத் திட்டியும் அவமரியாதை செய்திருக்கிறார்கள்.

இது என்றைக்கோ நடந்தது அல்ல, 2.10.24 காந்தி ஜெயந்தி நாளில் நம் கண் எதிரே நடக்கிற துயரம்… ‘நந்தன்’ படத்தை மறுபடி மறுபடி குறிப்பிடுவதைக் குறையாகக் கருத வேண்டாம்.

‘நந்தன்’ படத்தில் காட்டியதைப் போல் ஒடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பலருக்கும் இத்தகைய அநீதிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

உடன் நிற்க ஒருவர்கூட இல்லாமல், ஓர் அநாதை போல் பஞ்சாயத்து தலைவி அமர்ந்து போராடுவது ஏன் எவர் மனதையும் அசைக்கவில்லை?

என்றைக்கோ நடந்தது, எங்கேயோ நடந்தது என இனியும் ஈயம் பூசாமல், தயவுகூர்ந்து பட்டியலின பஞ்சாயத்து தலைவர்களை அழைத்துப் பேசுங்கள். அவர்கள் எதிர்கொள்ளும் கொடுவினைகளுக்கு முடிவு கட்டுங்கள்.

  • Palani பழனி கோவில் ராஜகோபுரம் சேதம் : ஆபத்து பக்தர்களுக்கா..? அரசுக்கா.?
  • Views: - 54

    0

    0