உன் மகளை கூப்பிட்டு வெளியே போ… பெண் ஓட்டுநர் ஷர்மிளாவின் தந்தையிடம் வாக்குவாதம் செய்த பேருந்து உரிமையாளர்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2023, 2:03 pm

கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் பயணம் செய்தார்.

பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பேருந்தில் பயணித்தபடியே பேசி சென்றார்.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார்.

விளம்பரத்திற்காக அரசியல் தலைவர்களை அழைத்து பேருந்தில் ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவின் தந்தையுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதம் செய்துள்ளார்.

மேலும் உன்மகளை அழைத்து கொண்டு வெளியே செல்லாம் என உரிமையாளர் கூறியதால் பணியை விட்டு ஷர்மிளா சென்றதாக கூறப்படுகிறது.

இன்று தி.மு.க. எம்.பி. கனிமொழி பேருந்தில் பயணம் செய்த நிலையில், திடீரென ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி