‘வந்தாச்சு ஒட்டகப் பால் பண்ணை’: தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவையில் துவக்கம்..!!

Author: Rajesh
21 February 2022, 7:54 pm

கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், பட்டதாரியான இவர் மக்களுக்கு பயன் பெரும் வகையில் ஒட்டக பால் பண்ணையை இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில் தான் சர்க்கரை நோயினால் அவதிப்பட்டதாகவும் இந்த ஒட்டக பால் குடித்ததினால் தனக்கு நோயிலிருந்து தீர்வு கிடைத்தாக தெரிவித்தார். தொடர்ந்து இது போல் மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என அரசு அனுமதிபெற்று குஜராத் பகுதியில் இருந்து 6 ஒட்டகம் கொண்டு வந்து நீலாம்பூரை அடுத்த குளத்தூர் பகுதியில் சங்கமித்ரா பண்ணை அமைத்து பால் விநியோகம் செய்வதாக தெரிவித்தார்.

இதே போல் மருத்துவ பயன்பாட்டிற்காக ஒட்டக பால் வாங்க வரும் மக்களுக்கு சலுகை விலையில் கொடுப்பதாக தெரிவித்த அவர் தென்னிந்தியாவில் முதல் முறையாக தான் இந்த முயற்சியை எடுத்திருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து விரைவில் தமிழகம் முழுவதும் ஒட்டக பண்ணை அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

தொடர்ந்து குஜராத் மாநில ஒட்டக ஆராய்ச்சியாளருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…