இந்தி மொழியில் வாக்கு கேட்டு பிரச்சாரம் : வடமாநில மக்களிடம் அண்ணாமலை வாக்கு சேகரிப்பு..!!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2024, 3:45 pm

கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கோவை தெற்கு தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

செட்டி வீதி, பெரிய கடை வீதி, பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றவாறு அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அவரோடு கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் உடன் இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக வட இந்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய தெப்பக்குளம் மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ஹிந்தி மொழியில் பேசி பிரச்சாரம் செய்தார்.

அப்போது வட இந்திய மக்களிடம் ஹிந்தியில் உரையாற்றிய அண்ணாமலை,அனைவருக்கும் வணக்கம்,எல்லோரும் தயவு கூர்ந்து நினைவு கொள்ளுங்கள் வரும் ஏப்ரல் 19″ஆம் தேதி நமது தாமரையை மலர தங்களது அனைத்து குடும்பங்களுக்கும் தெரியப்படுத்துங்க, நல்லதொரு இந்தியாவை கொண்டு வருவதற்கு நல்ல மனிதரைக் கொண்டு வருவதற்கு நல்ல மனிதரான மோடியை கொண்டு வருவதற்கு கோவையில் உள்ள தங்களின் குடும்பங்களின் அனைவரின் வலுவை சேர்த்து தாமரைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?