வேங்கைவயலில் அனுமதியின்றி பிரச்சாரம்.. நாம் தமிழர் வேட்பாளர், சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2024, 8:52 pm

வேங்கைவயலில் அனுமதியின்றி பிரச்சாரம்.. நாம் தமிழர் வேட்பாளர், சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு!

தமிழகத்தில் நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வந்த தீவிர பிரச்சாரம் இன்றுடன் முடிவடைந்தது.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இதுவரை கைத செய்யப்படாததால் அக்கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து, பதாகை வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சி நுழைந்து பிரச்சாரம் செய்யாமல் இருந்த நிலையில், இன்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ்,வேங்கைவயல் கிராமத்திற்குள் போலீசாரின் தடையையும் மீறிச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

வேங்கைவயல் கிராமத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததாக கிராம நிர்வாக அலுவலகர் அஜித்குமார் அளித்த புகாரின் பேரில், திருச்சி நாடாளுமன்ற தோகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் மற்றும் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் மீது 143, 171(E) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளுது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!