பாத்தரலாமா? சினிமா படத்தையே மிஞ்சும் அளவுக்கு முன்னாள் டிஜிபி வெளியிட்ட மிரட்டலான டீசர்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2023, 7:33 pm

பாத்தரலாமா? சினிமா படத்தையே மிஞ்சும் அளவுக்கு முன்னாள் டிஜிபி வெளியிட்ட மிரட்டலான டீசர்!!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்த சைலேந்திர பாபு, 1987ம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். காவல்துறை உதவி கண்காணிப்பாளராக கோபிச்செட்டிபாளையம், சேலம் மற்றும் திண்டுக்கல்லில் பணியாற்றிய சைலேந்திர பாபு, செங்கல்பட்டு, சிவகங்கை, கூடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.

பின்னர் காவல்துறை துணை ஆணையாளராக அடையாற்றிலும் பின்,. காவல்துறை துணைத் தலைவர் ஆக விழுப்புரம் சரகத்திலும், இணை ஆணையாளராக சென்னையிலும் பணியாற்றினார்.

காவல்துறை துணைத் தலைவர் ஆக திருச்சியிலும், காவல் ஆணையராக கோவையிலும், சென்னை வடக்கு மண்டலத்தின் காவல்துறை துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

1987 முதல் 2021 வரை தமிழக காவல்துறையில் பல்வேறு பொறுப்புகள் வகித்த சைலேந்திரபாபு, தமிழக காவல்துறையின் உயர்ந்த பொறுப்பான சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்போற்றார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 மே மாதம் பதவியேற்ற உடன், தமிழக காவல்துறையின் டிஜிபியாக பதவியேற்ற சைலேந்திர பாபு கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.
அதன்பிறகு சைலேந்திர பாபு, தமிழக டிஎன்பிஎஸ்சி தலைவராவார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால்ஆளுநர் ஆர்.என்.ரவி சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில் தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு யூடியூபராக அவதாரம் எடுத்துள்ளார். சைலேந்திரபாபு 2.0 என்று பெயரிடப்பட்ட அந்த சேனலின் முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ளது. காவல்துறை தலைமை அதிகாரியாக இருந்த போதே சைலேந்திர பாபு, மக்களிடையே அடிக்கடி வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.

இந்நிலையில் முழுநேரமாக தற்போது யூடியூபராக அவர் அவதராம் எடுத்துள்ளால், பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு மாணவர்களுக்காக பலமுறை உற்சாகமூட்டும் வகையில் பேசி உள்ளார்.

அவரது மோடிவேஷனல் பேச்சுக்கள் ஏற்கனவே பிரபலம் என்பதால், அவரது இந்த புதிய முயற்சிக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முன்னாள் டிஜிபி ரவி யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இப்போது அந்த வரிசையில் சைலந்திர பாபுவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?