திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் நிர்ணயம் செய்த தமிழக அரசு உத்தரவு ரத்து : நீதிமன்றம் போட்ட அதிரடி கண்டிஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2022, 5:52 pm

சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கம் சார்பில் 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் குறைவாக உள்ளது என கருத்து தெரிவித்து, 2017-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், வாகன நிறுத்தக் கட்டணத்தை தமிழக அரசு மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 417

    0

    0