திருவாரூரில் கணவன்-மனைவி, விருதுநகரில் மாமியார்-மருமகள்…ஒரே குடும்பத்தை சேர்ந்த வேட்பாளர்கள் அமோக வெற்றி: தேர்தல் முடிவில் சுவாரஸ்யம்..!!

Author: Rajesh
22 February 2022, 11:59 am

திருவாரூரில் கணவன்-மனைவி, விருதுநகரில் மாமியார்-மருமகள்…ஒரே குடும்பத்தை சேர்ந்த வேட்பாளர்கள் அமோக வெற்றி: தேர்தல் முடிவில் சுவாரஸ்யம்..!!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பல சுவாரஸ்யமான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் நகராட்சி தேர்தலில் 30 வார்டு பதவிக்கான தேர்தல் பிப்ரவர் 19ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க.வி சார்பில் தம்பதியினர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதில் 1வது வார்டு பதவிக்கு எஸ்.கலியபெருமாள் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடைய மனைவி மலர்விழி கலியபெருமாள், நகராட்சி 2வது வார்டில் போட்டியிட்டார். இவர், கடந்த 24 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே ஒரு முறை நகர் மன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

திருவாரூர் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க.வி சார்பில் போட்டியிட தம்பதியினர் வேட்பு மனு தாக்கல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் தற்போது இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து வெற்றி பெற்ற தம்பதியை கிராம மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இதே போல, விருதுநகர் நகராட்சி 25வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட (மருமகள்) சித்தேஸ்வரி மற்றும் 27வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட (மாமியார்) பேபி வெற்றி பெற்று ஆச்சர்யமடைய வைத்துள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1747

    0

    0