அடேங்கப்பா… வாழைத் தோட்டத்திற்கு நடுவே கஞ்சா செடி வளர்ப்பு : விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Author: Udayachandran RadhaKrishnan30 August 2022, 4:47 pm
வேலூர் : குடியாத்தம் அருகே வாழைத் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் வாட்ஸ் அப்பிற்கு, குடியாத்தம் அருகே அக்ரவாரம் கிராமத்தில் முனியன் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் ஏராளமான கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக தகவல் வந்தது.
இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையிலான காவலர்கள் ரகசியமாக சென்று அக்ரவாரம் கிராமத்தில் முனியன் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் சோதனை மேற்கொண்ட போது வாழை தோட்டத்தின் நடுவே சுமார் 40 கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து கஞ்சா செடிகள் அனைத்தையும் வேரோடு பிடுங்கிய காவல்துறையினர் அதை குடியாத்தம் நகரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நிலத்தின் உரிமையாளர் முனியனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இது போன்ற சமூக விரோத செல்களை தடுக்க மாவட்ட காவல் துறை அறிவித்துள்ள 9092700100 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் அது ரகசியம் காக்கப்படும் என்றும் எஸ்.பி ராஜேஷ் கண்ணண் தெரிவித்தார்.