கஞ்சா வியாபாரி ஓட ஓட வெட்டிக் கொலை : தொழில் போட்டியில் பறிபோன உயிர்…

Author: kavin kumar
8 February 2022, 5:19 pm

திண்டுக்கல் : சின்னாளபட்டி அருகே தொழில் போட்டியில் ஏற்பட்ட தகராறில் கஞ்சா வியாபாரி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

திண்டுக்கல் அருகே மேட்டுப்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான் பீட்டர் (40). இவர் வெள்ளோடு அடுத்த சிறுநாக்கன்பட்டியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனம் இரவல் கேட்டதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் அதிகரிக்கவே ஜான் பீட்டரின் நண்பர்கள் 2 பேர் அவரை கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் கொண்டு சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர். இதில் உயிர் தப்பிக்க ஓடிய ஜான் பீட்டரை விரட்டிச் சென்று கடுமையாக வெட்டியதில் ஜான்பீட்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த படுகொலை குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன் நேரில் விசாரித்து வருகின்றார். விசாரணையில் இறந்த ஜான்பீட்டர் கஞ்சா வியாபாரி என கூறப்படுகிறது. எனவே, தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் கொலையாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வைக்கப்பட்டு வருகின்றனர். அம்பாத்துரை போலீசார் விசாரிக்கின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ