படிக்கும் போதே கஞ்சா சப்ளை PART TIME… கோவைக்கு கஞ்சா கடத்தி வர முயற்சி… கல்லூரி மாணவர்கள் இருவர் உள்பட 3 பேர் கைது..!!
Author: Babu Lakshmanan18 July 2023, 10:58 am
ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சாவை கடத்தி வர முயன்ற இரு கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் – கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்னையை நோக்கி சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், 20 கிலோ எடையுள்ள 4 கஞ்சா பண்டல்கள் இருந்தன.
இதனைக் கண்டு அதிர்ந்து போன போலீசார், அவற்றை பறிமுதல் செய்ததுடன், கோவையைச் சோர்ந்த வசந்த் (22), சரண் (20), ஆட்டோ ஓட்டுநர் நந்தகுமார் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், வசந்த், சரண் ஆகியோர் கோவையில் உள்ள பிரபல தனியார் கலூரியில் பி.காம் பயின்று வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த ஒருவர், வசந்த்திடம் பணத்தை கொடுத்து ஆந்திராவில் உள்ள கஞ்சாவை எடுத்து வரச் சொன்னதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.