பைக்கில் வைத்து கஞ்சா விற்பனை… வடமாநில நபர் கோவையில் கைது.. 5 கிலோ கஞ்சா பறிமுதல்!!
Author: Babu Lakshmanan3 December 2022, 12:44 pm
கோவை : பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அவர்களால், அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதை பொருட்களை விற்பனை செய்வோர்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மலுமிச்சம்பட்டி to செட்டிபாளையம் சாலையில் காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது, இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சாவை எடுத்துச் சென்ற, அசாம் மாநிலத்தை சேர்ந்த கமல் முகியா என்பவரது மகன் சோனுகுமார் முகியா(28) என்பவரை கைது செய்தனர்.
இதையடுத்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5.5 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா, இருசக்கர வாகனம் மற்றும் கைபேசி ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது. இது போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அவர்கள் எச்சரித்துள்ளார்.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் 94981-81212 அழைக்கவும், 77081-00100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.