ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சென்னையைச் சேர்ந்த இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம் ரயில் நிலையம் அருகே கடந்த 6ம் தேதி நள்ளிரவு சென்னையை சேர்ந்த ஜான் பிரங்க்ளின் (27) என்ற இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த ராகுல் (22), திவாகர்(21), அரக்கோணம் புதுப்பேட்டையை சேர்ந்த சத்யா (22), அரக்கோணம் புளியமங்கலத்தை சேர்ந்த செல்வம் (25), அரக்கோணம் அம்மனூரை சேர்ந்த தர்மேஷ்(20) உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரனை நடத்தினர்.
விசாரனையில் சென்னையில் கஞ்சா விற்பனையில் ஏரியா பிரிப்பதில் இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், முன் விரோதம் காரணமாக ஜான் பிராங்கிளின் வெட்டி படுகொலை செய்ததாக தெரிய வருகிறது என காவல்துறையினர் தெரிவித்தனர். பல நாட்களாக ஜான் பிரங்க்ளினை தேடி வந்ததாகவும், அவன் அரக்கோணத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியதாக கிடைத்த தகவலின் பேரில் இங்கு வந்து கொலை செய்ததாக கொலையாளிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விசாரனையில் கொலைக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியை தேடி வருவதாகவும், கொலையாளிகளிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தி ஆயுதங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து அரக்கோணம் நகர காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.