கல்வராயன்மலை வனத்துறைக்குச் சொந்தமான அரை ஏக்கரில் கஞ்சா சாகுபடி.. அதிர்ச்சியில் மக்கள்!

Author: Hariharasudhan
4 January 2025, 7:05 pm

கல்வராயன் மலைப்பகுதியில் சுமார் அரை ஏக்கர் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் கஞ்சா பயிரிட்டது தொடர்பாக வனத்துறையினர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி: கடந்த ஆண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையைத் தடுப்பதில், அம்மாவட்ட காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கல்வராயன்மலை பெருமாநத்தம் கிராம மலை உச்சியில், அனுமதி இன்றி கஞ்சா செடி பயிர் செய்து வந்ததாக கரியாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிபாரதி, தனிப்பிரிவு காவலர் பிரபு ஆகியோர் தலைமையிலான சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் போலீசார், கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ரோந்துப் பணியின் போது, அங்கு பயிரிடப்பட்டு இருந்த கஞ்சா செடிகளைக் கண்டுபிடித்து, அது தொடர்பாக கோவிந்தராஜ் மற்றும் பர்வதம் ஆகிய இருவரை கைது செய்தனர்.

Kalvarayan Hills

இந்த நிலையில், கல்வராயன்மலையில் உள்ள பெருமாநத்தம் பகுதியில் சற்றேறக்குறைய அரை ஏக்கரில் ஆயிரத்து 600 கஞ்சா செடிகள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. அதாவது, 100 கிலோ கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஸ்கூட்டியில் சென்ற பெண்.. நண்பனுக்கு அழைப்பு.. இறுதியில் நடந்த துயரம்!

மேலும், இது தொடர்பாக தனியார் நாளிதழிடம் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் தலைமை வனச்சரகர் பெரியசாமி, “வனப்பகுதிக்குச் சொந்தமான பகுதியில் கஞ்சா பயிரிட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த வாய்ப்பு உண்டு. அதேநேரம், எங்களது துறை சார்பாகவும் விசாரணை நடத்தி, கஞ்சா செடி பயிரிட்டவர்களுடன் வனத்துறையினருக்குத் தொடர்பிருக்கிறதா என்றும் விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட வன அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!