எதிரி நாடுடன் மோதுவது போல பார்க்கிறாங்க.. இவ்வளவு பிடிவாதம் ஆகாது : கர்நாடகாவுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!
Author: Udayachandran RadhaKrishnan31 October 2023, 1:57 pm
எதிரி நாடுடன் மோதுவது போல பார்க்கிறாங்க.. இவ்வளவு பிடிவாதம் ஆகாது : கர்நாடகாவுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!
காவிரி நீர் விவகாரத்தில் தொடர்ந்து கர்நாடகா மற்றும் தமிழக அரசுக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 13ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்தில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் தண்ணீரை அக்டோபர் 16 முதல் அக்டோபர் 31 வரையில் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், கர்நாடகா அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை திறந்து விடவில்லை. காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா தலைமையில், நேற்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, நவம்பர் 1ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்கவில்லை. கர்நாடகாவின் போக்கு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல, ஏதோ எதிரி நாட்டோடு மோதுவது போலவும், நாம் ஏதோ சலுகை கேட்பது போலவும் கர்நாடகா நடந்து கொள்கிறது.
காவிரியில் 13 ஆயிரம் கன அடி நீர் திறக்க நாங்கள் கோரிக்கை வைத்தோம். 2,600 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. வரும் 3ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. நினைக்கிறார்கள். சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.