சாலையில் தறிகெட்டு ஓடிய கார்.. கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து… பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
18 October 2022, 7:04 pm

கேரளா ; திருச்சூரில் அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தறி கெட்டு ஓடி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குந்துங்குளம் சாலையில் வட்ட பாடம் என்ற பகுதியில் வைத்து முன்னே சென்ற காரை அதிவேகத்தில் முந்த முயன்ற கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், சாலையில் அங்கும் இங்குமாக தறிக்கட்டு ஓடி சாலையோர மதில் சுவரில் மோதிய பின்பு, தலைக்குப்புற கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காரில் இருந்த இருவர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் அந்த காரில் வந்த இரண்டு பேரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்த திருச்சூர் போலீசாரின் விசாரணையில், காரில் வந்தவர்கள் செம்மனூர் பகுதியை சார்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து, தற்போது அந்த விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?