குடியரசு தலைவர் செல்லும் பாதையில் தீவிர கண்காணிப்பு.. திடீரென பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து.. மதுரையில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
18 February 2023, 1:32 pm

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் சாலையில் நிலை தடுமாறி கார் பள்ளத்துக்குள் கவிழ்ந்தது விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு நாள் பயணமாக தமிழக வந்துள்ள குடியரசு தலைவர் திரெபதி முர்மு மதுரை விமான நிலையத்திலிருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

குடியரசுத் தலைவர் வருகையோட்டி அவனியாபுரம் – அருப்புக்கோட்டை சாலையில் வாகனம் செல்ல அனுமதிக்காமல், அவனியாபுரம் செம்பூரணி சாலை வழியாக வைக்கம் பெரியார் நகர், ரிங் ரோடு அடைந்து, மண்டேலா நகர் செல்ல போலீசார் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், அவனியாபுரம் செம்பூரணி ரோடு சந்திப்பில் வைக்கம் பெரியார் நகர் ரோட்டில் குடியரசுத் தலைவர் வரும் பாதையில் வாகனம் கவிழ்ந்தது. சம்பவம் அறிந்த அவனியாபுரம் காவல்துறையினர் அந்தக் காரை பளுதூக்கும் இயந்திரம் வைத்து தூக்கி, அந்த காரை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.

குடியரசுத் தலைவர் செல்லும் பாதையில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக விபத்து நடந்ததால், அந்த இடத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?