கல்லூரி நண்பர்களை காவு வாங்கிய கார் விபத்து.. ஸ்பாட்டில் 3 பேர் பலி : கோவையில் சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2024, 1:29 pm

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி நண்பர்களான இப்ராகிம், விஷால்,பூபேஷ், நரேன் ,பிரணவ் ஆகியோர் கோவையில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வந்துள்ளனர்.

கோவை வந்த இவர்கள் காரில் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.கார் கோவை மாவட்டம் கணியூர் சுங்க சாவடி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணித்த இப்ராகிம், விஷால், பூபேஷ், ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த இருவர் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சாலையில் சென்ற கார் தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் மூவர் பலியாகிய சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!