கார் – பைக் மோதி கோர விபத்து : நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த சார்பு ஆய்வாளர் உட்பட 4 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2022, 8:49 am

ராமநாதபுரம் : கார் – பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர் பட்டிணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் இன்று காலை கார் – பைக் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், நடைபயிற்சி மேற்கொண்டிருந்த சார்பு ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!