தாராபுரம் அருகே தனியார் பேருந்துடன் கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து : 4 பேர் பலியான சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2022, 8:23 pm

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொடுவாய் அருகே காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொடுவாய் அருகே காக்கா பள்ளம் என்ற இடத்தில் தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற காரும் திருப்பூரில் இருந்து தாராபுரத்தை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் சம்பவ இடத்தில் இரண்டு பேர் பலியான நிலையில் மருத்துவமனை சென்ற நிலையில் மேலும் இருவர் பலியான நிலையில் மேலும் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.

சாலை விபத்தால் காக்கா பள்ளம் பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. மேலும் சம்பவ இடத்தில் காங்கேயம் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் காங்கேயம் காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் ஊதியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vidaamuyarchi ticket booking தடபுடலாக தொடங்கிய “விடாமுயற்சி” டிக்கெட் முன்பதிவு…முண்டியடிக்கும் ரசிகர்கள்..!