சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது பல்டி அடித்து மோதிய கார் : நெஞ்சை பதற வைத்த வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan3 January 2025, 1:34 pm
கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்ற பெண் மீது மோதி பல்டி அடித்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியான ஷாக் சிசிடிவி காட்சிகளை வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்ட தலைநகரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பல்டி அடித்து நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது மோதி விபத்து ஏற்பட்டது
இதையும் படியுங்க: கொரோனாவை போல பரவும் புதிய தொற்று… 5 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் மீண்டும்..!!
கார் மோதியதில் லக்ஷ்மம்மா என்ற அந்தப் பெண் பரிதாபமாக மரணம் அடைந்தார். கார் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் கார் டிரைவரை மீட்டு நாகர்கர்னூலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.