கார் ஓட்டுநரை கடத்திய திமுக பெண் நிர்வாகி… வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி பலே மோசடி!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2025, 11:36 am

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜாப்ரபாத் நடுமசூதி தெரு பகுதியை சேர்ந்தவர் சபியுல்லா(29) கார் ஓட்டுனரான இவரை நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணி அளவில் முஸ்லீம்பூர் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு பெங்களூர் அவசரமாக செல்ல வேண்டும் கார் ஆக்டிங் டிரைவராக வரவேண்டும் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: மீண்டும் பாஜக தலைவராக அண்ணாமலை.. மக்கள் வரவேற்பு : களைகட்டும் போஸ்டர்கள்!!

அப்துல்லா சொன்ன இடத்திற்கு சென்ற சபியுல்லாவை, அப்துல்லா அவரது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் நியூடவுன் பேருந்து நிலையம் அருகில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் ஒரு அறையில் சபியுல்லாவை அடைத்து வைத்து அவரது மாமனாரிடம் வாங்கிய பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரேமா மற்றும் அப்துல்லா இருவரும் சரமாரியாக தாக்கி கத்தியை காட்டி மிரட்டி எழுதப்படாத வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கியதாக கார் ஓட்டுனர் சபியுல்லா வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

DMK Woman Executive

மேலும் தினமும் வெவ்வேறு எண்களில் இருந்து பிரேமா மற்றும் அப்துல்லா ஆகியோர் தொடர்ந்து செல்போனில் மிரட்டி வந்ததாக கூறப்படும் நிலையில் பிரேமா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார்.

Car Driver Kidnapped By DMK Woman Executive

அதில் கார் ஓட்டுநரை கடத்திச் சென்று அறையில் வைத்து தாக்கி கத்தியை காட்டி மிரட்டி எழுதப்படாத வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு நீ காவல்துறை எங்கு வேண்டுமானாலும் செல் நான் பார்த்துக் கொள்கிறேன் என பிரேமா கொலை மிரட்டல் விடுவதாகவும் தனக்கும் தனது குடும்பத்திற்கும் உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சபியுல்லா பிரேமா மற்றும் அப்துல்லா ஆகிய இருவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!