குழந்தையின் மீது ஏறி இறங்கிய கார்… பெற்றோர்களே கவனம்… பதைபதைக்க வைக்கும் வீடியோ… !!

Author: Babu Lakshmanan
14 June 2022, 8:26 pm

நாமக்கல் அருகே காரை பின்புறம் இயக்கும் போது பின்னால் நின்று கொண்டிருந்த குழந்தையின் மீது கார் ஏறி இறங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரம் அடுத்த பட்டணம் நடுத்தெரு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் அதே பகுதியில் இஸ்திரி கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 வயதில் தருண் என்ற மகன் உள்ளார். இவர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, அந்தப் பக்கம் ஒரு கார் வந்து திரும்ப முயன்றது.

இதற்காக, கார் ஓட்டுநர் பின்புறம் நோக்கி காரை இயக்கியுள்ளார். இவரது 2 வயது மகன் தருண் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று குழந்தை காரின் பின்புறத்தில் மோதி கீழே விழுந்துள்ளான். இதை அறியாமல் ஓட்டுனர் காரை திருப்ப முயன்றுள்ளார். அப்போது குழந்தையின் மீது கார் இருமுறை ஏறி இறங்கி உள்ளது.

பின்னர் அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே கார் ஓட்டுனர் சுதாரித்துக்கொண்டு காரை நிறுத்தியுள்ளார். பின்னர் பொதுமக்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது குழந்தையின் மீது கார் ஏறி இறங்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

https://twitter.com/stalin_ips/status/1536187205311340545?s=20&t=7jicmEfRxQuI3UbZc7pATA
  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…