ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: கல்குவாரி ஊழியர் பரிதாப பலி..!!

Author: Rajesh
8 February 2022, 2:38 pm

கோவை: செட்டிபாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் கல்குவாரி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 65). இவர் அங்குள்ள கல்குவாரியில் கேஷியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து ஊழியர்கள் 2 பேரை காரில் ஏற்றிகொண்டு தேகனியில் உள்ள ஊழியர்கள் குடியிருப்புக்கு அழைத்து சென்றார்.

அப்போது குவாரியில் இருந்து சிறிது தூரம் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி அங்கிருந்த 20 அடி பள்ளத்தில் கார் தலை குப்புற கவிழ்ந்தது. காரில் இருந்த 3 பேரும் சிக்கி கொண்டனர்.

இதில் பலத்த காயமடைந்து சோமசுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்தில் பலியான சோமசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த சேலம் கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த கார்த்திக் (21), சேலம் கல்லார்காட்டை சேர்ந்த மாணிக்கம்(43) ஆகியோரை மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!