கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடிய கார் : ஒருவர் பலி : மூன்று வாகனங்கள் சேதம்..!
Author: kavin kumar28 February 2022, 2:50 pm
புதுச்சேரி : புதுச்சேரியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஒடிய கார் மோதியதில் மூன்று வாகனங்கள் தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் பலி இர்ணடு பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்
கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் அப்சூலா ஹமித். ஒட்டுனரான இவர் தனது காரை எடுத்து கொண்டு கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி இன்று காலை வந்து கொண்டிருந்தார். அப்போது தவளக்குப்பம் எடையார் பாளையம் பகுதி அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த 3 இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியதில் மூன்று இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டது. இதில் கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பால் வியாபாரியான ரவிசந்திரன் (56) அருகே இருந்த ஆற்றில் தூக்கி விசிப்பட்டார்.
இதனை பார்த்த அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்ப்பட்டதில், அதிக அளவில் ரத்த கசிவு ஏற்ப்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த தெற்கு பகுதி போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்ப்படுத்தி விட்டு தப்பி சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கிய மற்ற இரண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.