மனைவியின் விபரீத ஆசை.. கணவன் கண்முன்னே சிதைந்து போன குடும்பம்!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2024, 5:00 pm

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த நெலப்புடி விஜய் குமார் தனது மனைவி உமா மற்றும் மனோஜ் ( 9), ரிஷி ( 7) ஆகியோருடன் விசாகப்பட்டினம் சென்று மீண்டும் சொந்த ஊருக்கு இன்று அதிகாலை காரில் வந்து கொண்டுருந்தனர் .

இதையும் படியுங்க: கடலில் வீசப்பட்ட இளைஞர்.. சிறுமிக்கு நேர்ந்த கொடுமையால் சகோதரர் வெறிச்செயல்!

கணவர் விஜய் குமார் ரவுலபாலம் மண்டல் இடக்கோட்டா வரை காரை ஓட்டி வந்த நிலையில் அதன் பிறகு அவரது மனைவி உமா காரை தான் ஓட்டுவதாக கூறி காரை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் டாக்டர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் சிந்தவாரிப்பேட்டை அருகே அதிகாலை மூன்று மணியளவில் இவர்கள் கார் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது.

Car Accident

இதில் விஜயகுமார், பிள்ளைகளை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது. இதில் கணவர் கண்முன் மனைவி, மகன்கள் பரிதாபமாக உயிரிழந்நதனர்,.

தகவல் அறிந்த எஸ்.ஐ. சிவகிருஷ்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Alanganallur Jallikattu highlights அலங்காநல்லூரில் கெத்து காட்டிய சூரியின் காளை…உதயநிதி கொடுத்த ரியாக்ஷனை பாருங்க..!