பேரனுடன் பைக்கில் சென்ற முதியவர்… கார் மோதியதில் சாக்கடையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் .. அதிர வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
27 May 2024, 2:09 pm

பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது எதிரே வந்த கார் மோதியதில் இருவர் சாக்கடை கால்வாயில் விழுந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இட்டேரி சாலையில் இரு சக்கர வாகனத்தில் முதியவரும் அவருடைய பேரனும் சென்று கொண்டிருந்தபோது, வேல் மருத்துவமனை அருகே இடது புறம் செல்ல வேண்டிய ஆம்னி வேன் வலது புறமாக திரும்பியது.

அப்போது, சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் மற்றும் அவருடைய பேரன் மீது வேன் மோதியதில் இருவரும் சாக்கடை கால்வாயில் விழுந்ததில் சிறு காயங்கள் உயிர் பிழைத்தனர். இதன் அருகில் வீட்டில் இருந்தவர்கள் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: உண்டியலை உடைச்சுதான் திருடுவாங்க.. ஆனா உண்டியலையே மூட்டை கட்டி திருடியது பார்த்திருக்கீங்களா? ஷாக் காட்சி!!

இதன் அருகிலேயே மின்சாரம் செல்லும் டிரான்ஸ்பார்ம் உள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது வேன் மோதி இருவர் சாக்கடை கால்வாயில் விழுந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?
  • Close menu