பழனி கோவில் கொடுத்த பரபரப்பு புகார் : இயக்குநர் மோகன் ஜி கைதை தொடர்ந்து சிக்கிய பாஜக பிரமுகர்!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2024, 4:16 pm

பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. 

பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்க திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள திண்டுக்கல்லை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பாஜக நிர்வாகி செல்வகுமார் தவறான தகவல் பரப்பி இருந்தார்.

இதனை மறுத்த கோயில் நிர்வாகம் பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கான நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே வாங்கப்படுவதாக தெரிவித்தது.

மேலும் படிக்க: என் கூட அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணு.. உன் கள்ளக்காதலனை ரிலீஸ் பண்றேன்.. பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்த காவலர்!

இது தொடர்பாக வதந்தி பரப்பியதாக அடிவாரம் காவல்துறையில் பாஜக நிர்வாகிகள் செல்வகுமார் மற்றும் வினோச் பி செல்வம் மீது புகார் அளித்தது. புகாரைப் பெற்ற காவல் துறையினர் கோவையை சார்ந்த பாரதிய ஜனதா கட்சி தொழிற் பிரிவு மாவட்ட துணைதலைவர் செல்வகுமார் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.

தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவது , மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பியது என இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் இயக்குனர் மோகன் ஜி மீதும் தவறான தகவல் பரப்புவதாக கூறி பழனி கோவில் நிர்வாகம் சார்பில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 204

    0

    0