அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து… மேலும் 2 அமைச்சர்களும் விடுவிப்பு : நீதிமன்றம் பரபர!!!
தேர்தல் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, பெரியகருப்பன், ராஜ கண்ணப்பன் மற்றும் ரகுபதி மீது பதிவான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது கரூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது, தேர்தல் விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட அதிக வாகனங்களில் சென்றதாக கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செந்தில் பாலாஜி மற்றும் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் போதும் அதிமுக – திமுக இடையே நடந்த மோதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருந்தனர். 2016 தேர்தலின்போது சிவகங்கையில் அதிமுக – திமுக இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுபோன்று 2018-ல் காவிரி மேலாண்மை வாரியம் கோரி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அமைச்சர் ரகுபதி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர்கள் மீதான வழக்குகளை றது செய்து ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
பிக்பாஸ் ஜோடி சின்னத்திரை நடிகையான பாவனி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அதிகளவு பிரபலமாக அறியப்பட்டார்.…
கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் இன்று கோவை மாவட்ட அ.தி.மு.க மகளிர் அணி சார்பில் தி.மு.க அரசை கண்டித்தும் அமைச்சர்…
This website uses cookies.