நயன்தாரா மீது வழக்குப் பதிவு செய்ய முடிவு.? மீண்டும் எழுந்த புதிய சர்ச்சை.!

Author: Rajesh
15 June 2022, 4:20 pm

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் மிக விமரிசையாக நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தாலியை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

திருமணம் முடிந்த மறுநாளே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் நயன்தாரா திருமணம் நடந்தபோது பொது இடமான மாமல்லபுரம் கடற்கரையில் பொதுமக்களை ஏன் அனுமதிக்கவில்லை என்று சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, புகாரை பெற்ற மனித உரிமை ஆணையம் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். திருமணம் முடிந்த நாள் முதல் நயன்தாராவுக்கு தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டே உள்ளது. இதை இவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

  • sai abhyankkar is the music director for allu arjun atlee project அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!