முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது வழக்குப்பதிவு : போலீசாரை அவதூறாக பேசியதாக வந்த புகார் மீது நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2022, 4:11 pm

விழுப்புரம் : முதலமைச்சரை ஒருமையில் பேசியதாகவும், காவல்துறையை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் நேற்று முன் தினம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், திமுக நாட்டு மக்களை ஏமாற்றி வஞ்சித்து கொண்டு இருப்பதாகவும்,  நீட் தேர்விற்கு சீராய்வு மனு திமுக அரசு தாக்கல் செய்யவில்லை எனவும், நீட் தேர்வில் திமுக நாடகம் நடத்துவதாகவும் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் நீட் தேர்வு குறித்து நேரிடையாக விவாதிக்க தயாரா என சவால் விடுத்த அவர் ஏன் நீட் குறித்து நேரடி சவாலில் பேச ஸ்டாலின் தயங்குகிறார் என கேள்வி எழுப்பினார்.

பிரச்சார மேடையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசும் போது திடீரென ஒருவர் ‘பேசுவதை நிறுத்து‘ என  கூச்சலிட்டத்தால் அதிமுகவினரை மிரட்ட திமுக  நினைக்க வேண்டாம் திமுகவினர்  ஒருதனுக்கு பிறந்து இருந்தால் இந்த மேடையில் 12 மணி வரை நிற்க தயார் தைரியம் இருந்தால் வா என முன்னாள் அமைச்சர் சவால்விட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

மேலும் காவல்துறை தற்போது ஏவல்துறையாக உள்ளது என பேசினார். போலீசார் குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சரின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது உள்ளிட்ட2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

  • Venkat Prabhu Wishes Ajithkumar Vidaamuyarchi சூப்பர் டூப்பர் ப்ளாக்பஸ்டர்.. விடாமுயற்சிக்கு விஜய் பட இயக்குநர் பாராட்டு மழை!