’அரசு வேலை கனவே போச்சு..’ நடுரோட்டில் உதவி ஜெயிலரை தாக்கிய மாணவி மீது பாய்ந்த வழக்கு!

Author: Hariharasudhan
4 January 2025, 7:39 pm

மதுரையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக உதவி ஜெயிலரைத் தாக்கியதாக மாணவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை: மதுரை மத்திய சிறையில் கைதியாக இருந்து விடுதலையான ஒருவர், மதுரை பைபாஸ் சாலை பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில், இந்த ஹோட்டலுக்கு சில நாட்களுக்கு முன்பு, மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணியாற்றி வரும் பாலகுருசாமி என்பவர் சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த விடுதலையாகிச் சென்றவரின் மகளிடம் பேசியுள்ளார். மேலும் அங்கிருந்த அவரது பேத்தியான 14 வயது மாணவியிடம் பேசி, தனது செல்போன் எண்ணையும் கொடுத்து, பள்ளிப் படிப்புக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுமாறு கூறியதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், உதவி ஜெயிலர் பாலகுருசாமி, அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அம்மாணவியை தனியாக அழைத்ததாக கூறப்படுகிறது. எனவேஎ, இது குறித்து மாணவி, தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதன்படி, தனது தாத்தா, பாட்டி, சித்தி ஆகியோருடன் அந்த மாணவி, உதவி ஜெயிலர் அழைத்த இடத்திற்குச் சென்றுள்ளார்.

FIR registered against a girl student in Jailer slapping issue in Madurai

அப்போது அங்கு பைக்கில் வந்த பாலகுருசாமி, தன்னுடன் வாகனத்தில் வருமாறு மாணவியை அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டுள்ளார். பின்னர், உடனடியாக அங்கு ஓடி வந்த மாணவியின் சித்தி, தன் அக்காள் மகளிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததாகக் கூறி, உதவி ஜெயிலர் பாலகுருசாமியை பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வைத்து சரமாரியாக தாக்கினார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதனையடுத்து, பால குருசாமியை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஐஜி பழனி உத்தரவிட்டார். மேலும், மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாலகுருசாமி கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: கல்வராயன்மலை வனத்துறைக்குச் சொந்தமான அரை ஏக்கரில் கஞ்சா சாகுபடி.. அதிர்ச்சியில் மக்கள்!

இந்த நிலையில், கரிமேடு காவல் நிலையத்தில் பாலகுருசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆரம்பம் முதலே திட்டமிட்டு தன்னிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொய்யான காரணங்களை சிறுமியின் மூலம் கூறி, தன்னை போனில் அழைத்து பொதுவெளியில் வீடியோ எடுத்து, அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக உதவி ஜெயிலரைத் தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் போலீசார் என்பதனால் வேண்டும் என்றே தன் மீது வழக்குப் பதிவு செய்ததாகவும், தற்போது அரசுப் பணிக்கு போட்டித் தேர்வு எழுத கடந்த 3 ஆண்டுகளாக முயற்சித்து வரும் நிலையில், தன் எதிர்காலத்தைச் சிதைக்க வேண்டும் என வழக்கு போடப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 49

    0

    0

    Leave a Reply