சிறுமியிடம் பாலியல் சீண்டல்..உதவி ஜெயிலரை தாக்கிய இளம்பெண் மீது வழக்குப்பதிவு!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2025, 8:08 pm

மதுரை மத்திய சிறையில் இருந்த கைதி விடுதலயைக மதுரையில் ஓட்டல் நடத்தி வருகிறார். அந்த ஓட்டலுக்கு மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணியாற்றி வரும் பாலகுருசாமி சென்றுள்ளார்.

அப்போது கைதியின் மகளிடம் பேசி, கைதியின் பேத்தியான 14 வயது மாணவியிடம் தனது செல்போன் எண்ணை கொடுத்து, ஏதேனும் உதவி தேவையென்றால் தொடர்பு கொள் என கூறியுள்ளார்.

நாள் செல்ல செல்ல, மாணவியிடம் செல்போனில் நலம் விசாரித்து பேச ஆரம்பித்த ஜெயிலர், ஒரு கட்டத்தில் தான் தங்கியிருக்கும் அறைக்கு தனியாக அழைத்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி, தாத்தா பாட்டி, சித்தி ஆகியோருடன் ஜெயிலர் அழைத்த இடத்திற்கு சென்றுள்ளார். இதில் மாணவியின் சித்திக்கு 30 வயது ஆகிறது. அப்போது அங்கு வந்த பாலகுருசாமி என்னுடன் சைக்கிளில் ஏறு என மாணவியிடம் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: ‘அனைத்தும் ஆதாரமற்ற தகவல்கள்’.. அண்ணா பல்கலை விவகாரத்தில் போலீசார் முக்கிய அறிக்கை!

இதைக் கேட்டு மாணவி கூச்சலிட்டார். இதையடுத்து சித்தி, பாட்டி, தாத்தா என அனவைரும் ஓடி வந்த நிலையில், மாணவியின் சித்தி ‘என் அக்கா மகளுக்கா பாலியல் தொல்லை கொடுக்கற’ என சரமாரியாக தாக்கினார்.

இது தொடர்பான வீடியோ வைரலாகியது. இதையடுத்து இந்த விவகாரத்தில் ஜெயிலரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஐஜி உத்தரவிட்டார். மேலும் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Case filed against woman for assaulting Assistant Jailer Case

இதே சமயம், கரிமேடு காவல் நிலையத்தில் பாலகுருசாமி அளித்த புகாரின் அடிப்படையில், தன்னிடம் இருந்து பணம் பறிக்க முன்பிலேயே திட்டமிட்டு, பொய்யான காரணங்களை சிறுமியின் மூலம் கூறி தன்னை தொலைபேசியில் அழைத்து, பொதுவெளியில் வீடியோ எடுத்து அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி, ஜெயிலரை தாக்கிய இளம்பெண்ணுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!