கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் : கைதான த.பெ.தி.க.வை சேர்ந்த 7 பேருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2023, 8:26 am

கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் : கைதான த.பெ.தி.க.வை சேர்ந்த 7 பேருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் பாஜக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டுகள் வீசியதாக தந்தை பெரியார் திராவிடக்கழகத்தைச் சேர்ந்த ஜீவா (எ) ஜீவானந்தம் (34), கோபால் (எ) பாலன் (41), கவுதம் (எ) கவட்டய்யன் (32) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

பெரியாருக்கு எதிராக பாஜக முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவையில் உள்ள குண்டுவெடிப்பு வழக்குகள் விசாரணைக்கான அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி டி.சசிரேகா தீர்ப்பளித்தார். அதில், கோபால், ஜீவா, கௌதம் ஆகிய மூவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.2000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

  • vasanthabalan apologize for the character portrayed in his veyil movie வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…