தாய் சொல்லும் வார்த்தையா இது? தமிழக டிஜிபி அலுவலக ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு!

Author: Hariharasudhan
10 January 2025, 6:46 pm

தகாத உறவில் இருந்த நபருடன் அட்ஜஸ்ட் செய்து கொள் என தாயாரே கூறியதால் மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பாக்யராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பணியாற்றி வரும் பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்தப் பெண் ஊழியர், தனது கணவருடன் விவாகரத்தாகி இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.

இதனிடையே, பாக்யராஜ் அந்த பெண் ஊழியரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த அக்டோபரில், வழக்கமாக பெண் ஊழியரின் வீட்டிற்கு வந்த பாக்யராஜ், அவர்களது மகள்களுக்கு பிரியாணி வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அங்கு இருந்த அந்த பெண் ஊழியரின் கல்லூரி படிக்கும் 21 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

Case registered against Mother and his boy friend in Chennai

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, பாக்யராஜ் கன்னத்தில் அடித்து வெளியே விரட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது குறித்து தாயாரிடம் நடந்ததை கூறியுள்ளார். ஆனால், அவரது தாயோ பாக்யராஜிடம் அட்ஜஸ்ட் செய்து கொள் எனக் கூறியதால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி, இது குறித்து எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: COME BACK கொடுத்தாரா சங்கர்…”கேம் சேஞ்சர்”படத்தின் திரை விமர்சனம் இதோ…!

இது தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கையில், கல்லூரி மாணவி குறித்து பாக்ராஜ் அவதூறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. எனவே, இது குறித்தும் கல்லூரி மாணவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நேற்று எழும்பூர் மகளிர் போலீசார் பாக்யராஜ் மற்றும் பெண் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!