வாங்கிக்கோ துட்டு… போடுங்க திமுகவுக்கு ஓட்டு : தருமபுரியில் இரவு நேரத்தில் பணப்பட்டுவாடா.. ஷாக் Video!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2024, 1:31 pm

வாங்கிக்கோ துட்டு… போடுங்க திமுகவுக்கு ஓட்டு : தருமபுரியில் இரவு நேரத்தில் பணப்பட்டுவாடா.. ஷாக் Video!!

நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

இருந்த போதிலும் ஆங்காங்கே பணம் மற்றும் பரிசு பொருட்கள் பொதுமக்களுக்கு வாக்களிக்க கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றி பெற அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் வீடு வீடாக சென்று பொதுமக்களின் பூத் சிலிப்பை வாங்கி பார்த்து தங்களது வார்டு பகுதியில் இவர்கள் உள்ளனரா என ஆராய்ந்து அவர்களின் பெயரை டிக் செய்து 300 ரூபாய் பணத்தை கையில் கொடுத்து பணம் வாங்குவது பெறிதல்ல, மறக்காமல் உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு போடுங்க என அங்கிருந்த பணம் கொடுக்கும் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: மோடி திறந்து வைத்த திருவாரூர் – தஞ்சாவூர் புதிய தேசிய நெடுஞ்சாலை.. 50 நாளில் சாலைகள் உள்வாங்கியதால் அதிர்ச்சி!

மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ