ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு…. அமைச்சர் மீது நீலம் பண்பாடு மையம் பகீர் குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan16 January 2025, 12:29 pm
மதுரை ஜல்லிக்கட்டில் அமைச்சர் மூர்த்தி சாதி பாகுபாடு காட்டுவதாக நீலம் பண்பாட்டு மையம் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து அம்மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு!
இதையும் படியுங்க: திருப்பதி கோவிலுக்கு மொட்டை போட வந்த சிறுவன் மரணம்… விளையாடும் போது அதிர்ச்சி சம்பவம்!
இருமுறை முதல் பரிசு வென்ற வீரர் தமிழரசன் என்று அனைவரும் அறிந்தும் திட்டமிட்டு டோக்கன் அளிக்காமல் நேரத்தை வீணடித்துள்ள நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
அமைச்சர் மூர்த்தி தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதும், போராடி டோக்கன் வாங்கியும் தன்னை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கவில்லை ,களமிறங்க முயற்சித்தும் காவல்துறை ஒருபக்கம் தாக்கினார்கள் இதற்கு முழு காரணம் சாதிதான் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன, வீரர் தமிழரசன் புறக்கணிக்கத்திருப்பது ஏன் ???