இருவேறு சமூகத்தினரிடையே மோதல்.. இளைஞர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 January 2023, 6:36 pm

இருவேறு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதில் பட்டியலின இளைஞர்களை, பயங்கர ஆயுதத்தால் தாக்கியதில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சத்துக்குடல் கீழ் பாதியில் காணும் பொங்கலை முன்னிட்டு அக்கிராமத்தில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சிக்காக வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருள் வழங்க அதனை வாங்குவதற்காக பட்டியல் இனத்தைச் சார்ந்த சிவசங்கர், ஹரிகிருஷ்ணன், ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சாத்துக்குடல் கீழ்ப்பாதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது ஆலிச்சிக்குடி கிராமத்தில் அருகே சென்று கொண்டிருந்த பொழுது, அங்கு கூடியிருந்த ஒரு தரப்பு இளைஞர்கள் வாகனத்தை இந்த சாலையில் செல்லக்கூடாது என வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சிவசங்கர், ஹரிகிருஷ்ணன், ஆகிய இருவரும் விருத்தாச்சலம் சென்று பரிசு பொருட்களை வாங்கிக் கொண்டு அதே வழியில் மீண்டும் வரும்பொழுது, 20-க்கும் மேற்பட்ட ஒரு தரப்பு இளைஞர்கள் பட்டியல் இனத்தைச் சார்ந்த சிவசங்கர், ஹரிகிருஷ்ணன், ஆகிய இருவரையும் சாதி பெயரை சொல்லி பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது,

உடனே அங்கு வந்த சாத்துக்குடல் கீழ்பாதி கிராமத்தை சேர்ந்த தவமணி மகன் பாலமுருகன், சாமிதுரை மகன் சிவா என்கிற அறிவுடை நம்பி ஆகியோர் அடி வாங்கிக் கொண்டிருந்த சிவசங்கரன், ஹரி கிருஷ்ணன், ஆகிய இருவரையும் காப்பாற்ற முற்ப்பட்ட போது பாலமுருகன் சிவா என்கிற அறிவுடை நம்பியையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த நான்கு பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்

இது குறித்து விருத்தாசலம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம் காவல்துறையினர்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 419

    0

    0