யாரு வேணா சாப்பாடு போடட்டும்.. ஆனா நீ போடக்கூடாது; அன்னதானம் வழங்குவதில் சாதிய பிரச்சினை..!

Author: Vignesh
21 August 2024, 10:55 am

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தேர் திருவிழாவில் அன்னதானம் வழங்குவதில் ஏற்பட்ட சாதிய பிரச்சினை சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. தேரோட்டம் நடைபெறுவதற்கு முன்பாக இந்த கோவிலில் கொடியேற்றத்திற்குப் பின்பு தினம் தோறும் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சமூகத்தைச் சார்ந்தவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம்.

இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோவிலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் அன்னதானம் வழங்குவதற்காக சமையல் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, உயர்சாதியினர் நீங்கள் யார் எந்த ஊர் என்று விசாரித்து தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதை அறிந்து நீங்கள் எல்லாம் இன்றைக்கு அன்னதானம் வழங்க கூடாது என தெரிவித்து இன்று கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சார்பில் அன்னதானம் வழங்க வேண்டும், ஆனால் நீங்கள் எதற்காக அன்னதானம் வழங்குகிறீர்கள் என்று காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

அங்கு வந்த காவல்துறையினர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் சமையல் செய்யும் இடத்திற்கு சென்று எரிந்து கொண்டிருந்த கேஸ் சிலிண்டர் எரிவாயுவை அணைத்தனர். பின்பு அவர்களை கோவிலுக்குள் நுழையக்கூடாது வெளியே செல்லுங்கள் என காவல்துறையினர் வெளியேற்றியுள்ளனர். சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான சமையல் பொருட்களை கொண்டு சென்று அன்னதானம் வழங்குவதற்காக செய்திருந்த பொருட்கள் அனைத்தையும் காவல்துறையினர் அடாவடி செய்து வாகனத்தில் ஏற்றி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மனம் நொந்த தம்பதியினர் மீண்டும் கோவிலுக்கு அருகே உள்ள மண்டபம் ஒன்றில் அன்னதானம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். சமூக நீதி என்று சொல்லக்கூடிய திராவிட மாடல் ஆட்சியில் அன்னதானம் வழங்குவதற்கு கூட சாதி மதம் பார்த்து செயல்பட்டு வருவதாகவும், அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்த கோவிலில் இது போன்ற சாதிய பிரச்சனைகள் வருடம் தோறும் ஏற்படுவதாக இதனை அரசு நடவடிக்கை மேற்கொண்டு அடாவடியில் ஈடுபட்ட காவல்துறையினர் மீதும் அன்னதானம் வழங்குவதற்கு தடையாக இருந்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட தம்பதியினர் தெரிவித்தனர்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 188

    0

    0