பள்ளி மாணவர்கள் கைகளில் சாதிக் கயிறு… தமிழக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த காமராஜர் பேத்தி!!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2023, 1:31 pm

பள்ளி மாணவர்கள் கையில் வண்ணங்களிலான சாதிக்கயிறுகளை கட்ட தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு காமராஜர் பேத்தி கமலிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாங்குநேரியில் நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டி இது போன்ற ஒரு சம்பவம் இனியும் தமிழ்நாட்டில் தொடரக்கூடாது என்ற அக்கறையில் இந்தக் கோரிக்கையை வைப்பதாக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பேத்தி தெரிவித்துள்ளார்.

சாதி என்பதே இருக்கக் கூடாது என்பது தான் தனது தனிபட்ட கருத்து என்றும் கூறிய அவர், சாதிக்கயிறுகள் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், முதலமைச்சர் ஸ்டாலினும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக காமராஜர் பேத்தி கமலிகா தெரிவித்துள்ளார்.

கமலிகா காமராஜ் தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருப்பதும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் சீட் எதிர்பார்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் நெல்லை மக்களவைத் தொகுதியை கமலிகா காமராஜ் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் நெல்லையை மையமாக வைத்து அரசியல் பணிகளில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!