முதலமைச்சர் ஸ்டாலின் உண்ணாவிரதம் இருந்தாவது தண்ணீர் வாங்கி தர வேண்டும் என்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 45வது நாளாக இன்று விவசாயிகள் மத்திய அரசு விவசாயிகளுக்கு மொட்டை அடித்து விட்டதாக கூறி மொட்டை அடிக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். மேலும், 2016ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு, பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக கையெழுத்தை போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது, ஆகையால் விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம்.
மேலும், காவிரியில் மேகதாது அணைக்கட்ட மத்திய அரசு கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது, காவிரியில் காவிரி நதிநீர் ஆணைய உத்தரவுப்படி மாத மாதம் கர்நாடக அரசு உரிய தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் உள்ளிட் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அய்யாகண்ணு பேட்டி அளித்ததாவது :- தமிழகம் ஒரு விவசாய பூமி. கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது. மத்திய அரசு தமிழக அரசு விவசாயிகளுக்கு மொட்டை அடித்து விட்டது. மாநில சர்க்கார் இதனை பார்த்துக் கொண்டிருக்கிறது..
ஜெயலலிதா இருந்தபோது அவர் தண்ணீர் கேட்டு உண்ணாவிரதம் இருந்தார், அதேபோல தமிழக முதல்வர் தண்ணீர் கேட்டு உண்ணாவிரதம் இருக்க வேண்டும். காவிரி தண்ணீரை பெற்று தர வேண்டும். கர்நாடக அரசு 90 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்த தற்பொழுது 30 லட்சம் ஏக்கர் மூன்று போகும் சாகுபடி செய்கிறது. ஒரு லட்சம் ஏக்கர் கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனே தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டும். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், என தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.