2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தாலும் கவலையில்ல… தொடர்ந்து மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார் ; திருச்சி மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை..!!

Author: Babu Lakshmanan
17 October 2022, 11:24 am

திருச்சி ; காவிரியில் 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தாலும், தொடர்ந்து மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் காவிரியில் ஏற்பட்டுள்ள வௌ்ளப்பெருக்கு காரணமாக வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. காவிரியில் 1.30 லட்சம் கன அடி தண்ணீர் முக்கொம்பு அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் 41 ஆயிரம் கன அடி கொள்ளிடத்தில் 89 ஆயிரம் கனஅடியும் திறந்து விடப்பட்டு உள்ளது.

trichy cauvery - updatenews360

மேட்டூரில் இருந்து 1.95 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இன்று மதியத்திற்குள் திருச்சியில் நீர்வரத்து 1.95 லட்சமாக அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ள தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, அவர் பேசியதாவது ;- கடந்த கால மழையின் போது 2.37 லட்சம் கன அடி நீரை எதிர்கொண்டோம். தற்போது 2லட்சம் கன அடிக்கும் குறைவான தண்ணீர் வருவதால், எளிதாக எதிர்கொள்ள முடியும். திருச்சி மாவட்டத்தில் பிளாக் ஸ்பாட் என்று 59 இடங்களை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர், உள்ளாட்சி துறையில், காவல்துறையினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சேர்ந்தவர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

trichy cauvery - updatenews360

அந்த குழு பிளாக் ஸ்பாட் இடங்களை ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர். பொதுப்பணித்துறையில் மணல் மூட்டைகள், படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தற்போது 60 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது. இவைகள் 5 இடங்களில் வைக்கப்பட்டு அதற்கான மூங்கில் கம்புகளும் தயார் நிலையில் உள்ளது. காவிரியில் 2லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தாலும், அதே சமயம் மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது, என்ன மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

trichy cauvery - updatenews360

மேலும், தொடர்ந்து நேற்று இரவு அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆய்வு மேற்கொண்டார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!