கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி ரெய்டு : பிரபல மருத்துவமனை தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக சோதனை.. போலீஸ் குவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan20 July 2022, 1:45 pm
கோவை சத்தி சாலையில் செயல்பட்டு வந்த சென்னை மருத்துவமனை தாக்கப்பட்ட வழக்கில் பிரபல வழக்கறிஞரும் மாநில கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவையின் மாநில தலைவருமான எஸ்பி ராஜேந்திரனுக்கு சொந்தமான விடுதி மற்றும் அவரது வீடுகளில் சிபிசிஐடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கறிஞர் ராஜேந்திரன் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தலை மறைவாக உள்ள நிலையில் அவர்கள் முன் ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் ஆய்வாளர் சுமதி ஆயிரம் தலைமையில் 13 மேற்கொண்ட அதிகாரிகள் குழுவினர் இரண்டு இடங்களிலும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் குறித்து சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை சாய்பாபா காலனி நாராயண குரு சாலையில் உள்ள இரண்டு இடங்களிலும் சோதனை நடைபெறுவதை ஒட்டி போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.