பொள்ளாச்சியில் தனியார் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதி ஒருவர் பலி… வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…!!

Author: Babu Lakshmanan
23 March 2022, 10:35 pm

கோவை ; பொள்ளாச்சி அருகே தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

பொள்ளாச்சி உடுமலை சாலை நல்லாம்பள்ளி பிரிவு அருகே பழனியில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனத்தில் வந்த அய்யாசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் போலீசார் தனியார் பேருந்து ஓட்டுநரிடம் விபத்து குறித்து விசாரித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விபத்தில் பலியான அய்யாசாமியின் உடல் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து போலீசார் கூறுகையில், “பொள்ளாச்சி உடுமலை சாலையில் அதிக வாகனங்கள் செல்வதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து விழிப்புணர்வு செய்து வருகிறோம்,” என தெரிவித்தனர்.

  • Squid Game 2 Today Release timing on Netflix இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?
  • Views: - 1442

    0

    0