குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமிராக்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: கோவை மாவட்ட கமிஷனர் உத்தரவு..!!

Author: Rajesh
23 April 2022, 9:50 am

கோவை: கோவை மாநகரில் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்ய போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல் கூறியதாவது, கோவை மாநகரில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்கவும், குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் மாநகரப் பகுதிகளில் போலீசார் பொதுமக்கள் இணைந்து கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகின்றனர்.

மாநகர் முழுவதும் 23 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன. சாலை போக்குவரத்து சிக்னல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் சில எண்ணிக்கையிலான கேமராக்கள் மாநகர போலீசாரின் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன.


கண்காணிப்பு கேமராக்கள் பெரும்பாலானவை பயன்பாடின்றி உள்ளன தற்போதைய சூழலில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும் குற்றவாளிகளை கண்டறியவும் கண்காணிப்பு கேமராக்கள் பங்களிப்பு அவசியம் எனவே காவல்துறையினர் முன்னரே பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராக்களின் நிலையை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய அந்தந்த போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டுள்ளன. ஒரு வாரம் இந்த ஆய்வு பணி மேற்கொள்ளப்படும் பழுதடைந்த முறையான இயங்காத கண்காணிப்பு கேமராக்கள் மீண்டும் முழு பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி தகவல் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 1122

    0

    0