கோழிப் பண்ணையில் நுழைந்த சிறுத்தை…அலற விட்ட சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan22 January 2023, 11:39 am
கோழி பண்ணையில் இருந்து கோழியை பிடித்து சென்ற சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணுவாய் தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள், காட்டுபன்றிகள் நடமாற்றம் அதிகமாக இருந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுத்தை நடமாட்டமும் தென்பட்டு வந்தது.
கணுவாய் அடுத்த திருவள்ளுவர் நகர், சோமையனூர் ஆகிய பகுதிகளில் சிறுத்தை ஆடுகளை தாக்கி சென்றது. இதனையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை கண்காணிப்பதற்காக கடந்த இரு மாதங்களுக்கு முன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதனையடுத்து சில நாட்களாக சிறுத்தை தென்படாத நிலையில் தற்போது கணுவாய் அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் தென்பட்டுள்ளது.
கணுவாய் அடுத்த சோமையம்பாளையம் யமுனா நகரில் அஸ்வின் என்பவரது கோழி பண்ணையில் இன்று அதிகாலை சுமார் 4:00 மணி அளவில் வந்த சிறுத்தை ஒன்று கோழி பண்ணையில் இருந்து கோழியை பிடித்து சென்றுள்ளது.
இது அங்கிருந்த சிசிடிவி யில் பதிவாகியுள்ளது. தற்பொழுது அந்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது. என எனவே வனத்துறையினர் சிறுத்தையை விரைந்து பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.