திருப்பதிக்கு சென்ற மதுரை மூதாட்டி மாயம்… வனப்பகுதிக்குள் வழிதவறி சென்ற சிசிடிவி காட்சி வைரல்!

Author: Udayachandran RadhaKrishnan
18 January 2025, 11:02 am

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சல்லுப்பாபட்டி கிராமத்தைச் சேர்ந்த 64 வயது பாட்டி வெள்ளத்தாய். வெள்ளதாய் தன்னுடைய மகன் மாரியப்பன் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரோடு கடந்த பத்தாம் தேதி திருப்பதி மலைக்கு வந்திருந்தார்.

சாமி கும்பிட்டு லட்டு பிரசாதம் வாங்க அவர்கள் சென்று இருந்த போது இயற்கை உபாதைகளுக்காக தனியாக சென்ற வெள்ளத்தாய் அதன் பின் திரும்பி வரவில்லை.

மாரியப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தார் திருப்பதி மலை முழுவதும் அவரை தேடிப்பார்த்தும் கிடைக்காத நிலையில் திருமலை காவல் நிலையத்தில் வெள்ளத்தாய் காணாமல் போனது பற்றி புகார் அளித்தனர்.

இதையும் படியுங்க: முதல்முறையாக களத்தில் மக்களைச் சந்திக்கிறார் விஜய்.. ஆட்டம் காணுமா தமிழக அரசியல்?

மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பகுதி செய்த போலீசார் திருப்பதி மலையில் வெள்ளத்தாய் நடமாட்டம் தொடர்பாக பதிவாகி இருக்கும் சிசிடிவி பதிவு காட்சிகளை கைப்பற்றி தீவிரமாக அவரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர் திருப்பதி மலையிக் இருந்து பாபநாசம் செல்லும் வழியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு செல்லும் வழியில் நடந்து சென்று கொண்டிருந்தது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் சிறுத்தைகள், ஓநாய்கள் ஆகிய பயங்கர வனவிலங்குகளின் நடமாட்டம் இருபது குறிப்பிடத்தக்கது. அந்த பகுதியில் வெள்ளத்தாயை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!