ஓசியில் ஸ்வீட் கேட்டு டார்ச்சர்.. தரமறுத்தால் கடையின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய நபர் : சிசிடிவி காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2024, 1:29 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புத்துக்கோவில் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் ஜெயக்குமார் (37) இவர் வக்கணம்பட்டி பகுதியில் நியூ ஐஸ்வர்யா பேக்கரி என்ற பெயரில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு பத்து மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கடைக்கு வந்து ஓசியில் ஸ்வீட் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

இதனால் ஜெயக்குமார் ஸ்வீட் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர் கையில் வைத்திருந்த சுத்தியால் கடையின் கண்ணாடிகளை அடித்து உடைத்த அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்டார். அதன் சிசிடிவி காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளன.

அப்போது அந்த மர்ம நபரை ஜெயக்குமார் அவருடைய உறவினர்கள் உதவியுடன் பிடித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதன் காரணமாக யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஜோலார்பேட்டை என அடுத்த குப்புசாமி தெரு பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரகாஷ்(47) என்பது தெரியவந்தது

ஓசியில் ஸ்வீட் கேட்டு பேக்கரி கடையை அடித்து உடைத்த சம்பவம் பரபரப்பை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி